மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இருக்கைக்கு சென்ற பிரதமர் மோடி அவருடன் கைகுலுக்கி சிறிதுநேரம் பேசினார்.

மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் படுவதாக அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று அறிவித்தார். பின்னர் வந்தேமாதரம் பாடல் இசைக்கப்பட்டது. பாடல் முடிந்தவுடன் பிரதமர் நரேந்திரமோடி நேராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்றார். அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கி சிறிதுநேரம் பேசினார். அதை பார்த்து மற்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவைத் துணைத்தலைவர் பி.ஜே.குரியன், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் உட்பட சிலருடனும் பிரதமர் மோடி கைகுலுக்கினார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனை வரிடமும் மோடி கைகுலுக்கி சிறிதுநேரம் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

Leave a Reply