மேற்கு வங்கத்தில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள்மீது நேற்று கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தசம்பவம் குறித்து ஜேபி. நட்டா பேசுகையில், ‘மம்தா ஜி எப்போதும் உண்மையை மறைக்க முயல்கிறார்.மேற்கு வங்கத்தில் அராஜகம் உச்சத்தில் உள்ளது.மாநிலத்தில் மம்தா ஜி-ன் ஆசிர்வாதங்களுடன் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள்விழிப்புடன் உள்ளனர்.தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள். மக்கள் ஆதரவை இழந்ததால் மம்தா ஜி விரக்தியில் உள்ளார்.ஜனநாயகரீதியாக நாங்கள் போராடுவோம்,’ என்றார். ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட குற்றச்சாட்டுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்குவங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைகுறித்து ஆளுநரிடமும் தலைமை செயலாளரிடமும் அமித் ஷா அறிக்கை கேட்டுள்ளார்.

Comments are closed.