மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒருபேய் என்று உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திரசிங் இன்று வர்ணித்தார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹிந்துக்களை கொன்று குவித்தவர்களை, மம்தாபானர்ஜி இப்பொழுது பாதுகாத்து கொண்டிருக்கிறார் என்றும் சுரேந்திரசிங் குற்றம் சாட்டினார்.

ஒரு பேய்க்கான குணாம்சங்கள் என்னவோ. அவை அனைத்தையும் பெற்றுள்ளவர்  மம்தாபானர்ஜி. ஒருபெண்ணிடம் வழக்கமாக உள்ள பண்புகள் குணாம்சங்கள் அவரிடம் இல்லவே இல்லை என்று அவர் தெரிவித்தார். குடியுரிமை திருத்தசட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்ப்பதைச் சுட்டிக்காட்டிய சுரேந்திர சிங், ஆயிரக்கணக்கில் ஹிந்துக்களை கொன்று குவித்தவர்களுக்கு மம்தா பாதுகாப்பு வழங்கிவருகிறார்.

அத்தகைய தலைவரை பேய் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? என்று சுரேந்திரசிங் கேட்டார்.

பாஜக தேவதைகளின் கட்சி. சமாஜ்வாதி. பகுஜன்சமாஜ் .தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் எல்லாம் ராட்சஸர்கள் அல்லது பேய்களின் கட்சி என்று மேலும் விளக்கம் அளித்தார் சுரேந்திர சிங்.

பேய்களெல்லாம் பயங்கரவாதத்திற்கு ஆதரவுதருகின்றன என்றார் சுரேந்திர சிங்.  போலீஸ் கமிஷனர் அமைப்பு முறையை கொண்டுவந்திருப்பது குறித்து கேட்டபொழுது, எந்தமுறை வந்தால் என்ன, அதிகாரிகள், தொழிலாளர்கள், தலைவர்களின் மனங்கள் மாற வேண்டும் என்று சுரேந்திர சிங் விளக்கம் அளித்தார்.

One response to “மம்தா பானர்ஜி ஒரு பேய்”