நாட்டில் கருப்புபணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பெரும்பாலான எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார்.

இதுதொடர்பாக டெல்லி மற்றும் பீகார் சென்று ஆதரவு திரட்டினார். இதுகுறித்து அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப்கோஷ், இந்த அறிவிப்புக்குப்பின் மம்தா புத்தியை இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா இளைஞர் அணி ஏற்பாடுசெய்திருந்த ஒரு நிகழ்ச்சில் கோஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘மோடியின் ரூபாய்நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலம் மம்மா கோடிக்கணக்கான பணத்தை இழந்து புலம்பிவருகிறார்.

ஏன் அவர் டெல்லி மற்றும் பாட்னா சென்றார். அங்குசென்ற அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால் தலைமை செயலகத்திற்குள் சென்று உட்கார்ந்துகொண்டார். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், இறுதியில் அவர் கங்கையில்குதிக்கலாம். அவர் தனது புத்திய இழந்து விட்டார். புத்தியை இழந்த அவரை நாங்கள் பார்க்க தயாராக இல்லை’’ என்றார்.

Leave a Reply