குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு பிறகு, பிரதமர் மோடி மரபுகளை மீறி மேடையில் இருந்து இறங்கிவந்து மக்களை நோக்கி கையசைத்தார்.

இந்தியாவின் 69வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி மரியாதைசெலுத்தினார். இந்திய குடியரசு தின விழாவில் முதல்முறையாக 10 ஆசியான் நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து முப்படையினரின் கண்கவர் அணி வகுப்பு நடந்தது. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆசியான் நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் அணிவகுப்பை பார்வை யிட்டனர். அணிவகுப்பிற்கு பிறகு, பிரதமர் மோடி, விதிமுறைகளை மீறி, விழாமேடையில் இருந்து கீழே இறங்கிவந்து மக்களை நோக்கி கையசைத்தார். மக்களும் ஆரவாரமாக பிரதமரை நோக்கி கையசைத்தனர். இதேபோன்று சென்ற இந்திய சுதந்திரதினத்தின் போதும், பிரதமர் மோடி விழாமேடையில் இருந்து இறங்கி, அங்குள்ள குழந்தைகளுக்கு கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply