தமிழிசை ,ராமதாஸ் அவர்கள் மரம் வெட்டுவதைப்பற்றி பேசலாமா என்றுகேட்ட ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையே அவர் இழிவு செய்து விட்டதாக பாமகவினர் பிளேட்டைத் திருப்புவது அயோக்கியத்தனம்…

சிலர் சில விஷயங்களைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம்..மீறி பேசினால் அது காமெடியாகத்தான் பார்க்கப்படும்..

ஊழல் ஒழிப்பு பற்றி கருணாதியோ , வாரிசு அரசியலின் தீமை பற்றி ஸ்டாலின் , அன்புமணி , ராகுல் போன்றவர்களோ , தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பற்றி வைகோவோ பேசினால் , மற்றவர்கள் கிண்டலடிக்கத்தான் செய்வார்கள்…

அதுபோலத்தான் மரம் வெட்டுவதுபற்றி ராமதாஸ் பேசுவதும்…நியாயமான போராட்டங்களுக்கு ஏராளமான வழிமுறைகள் இருக்க , ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவீழ்த்தும் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர் ராமதாஸ்… அவரைப்பற்றி பேசினாலே அதுதான் நினைவுக்கு வரும்….அதைமாற்ற அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் எடுபடவில்லை…பாமகவின் பசுமைத்தாயகம் போன்ற முயற்சிகளே மக்களால் காமெடியாகத்தான் பார்க்கப்பட்டன…

யதார்த்தம் இப்படியிருக்க , மரங்களை வெட்டக்கூடாது என்று ராமதாஸ் பேசினால் அதை ஒரு அரசியல் தலைவர் கிண்டலடிப்பதில் என்ன தவறு? உடனே தமிழிசை வன்னியர்களை இழிவுசெய்கிறார் என்று திசைதிருப்புவது என்ன மாதிரியான அரசியல்?

காடுவெட்டி குரு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்தபோது நூற்றுக்கணக்கான பஸ்களை அடித்து நொறுக்கினர் பாமகவினர்….முதலில் இதுபோன்ற வன்முறை அரசியலில் இருந்து தன் கட்சித்தொண்டர்களை அன்புமணியும் , ராமதாசும் நல்வழிப்படுத்தட்டும்…அதன்பின்னர் பிறகட்சிகளுக்கு ஆலோசனை சொல்லலாம்…

நாங்கள் பாஜகவுடன் மோதுகிறோம்..எங்களையும் உங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஸ்டாலினிடம் ராமதாஸ் கேட்கவிரும்பினால் அதை நேரடியாகவே கேட்கலாம்…தமிழிசை அவர்களின் தலையை உருட்டத்தேவையில்லை…

நன்றி சரவணகுமார்..

Leave a Reply