இந்த டுமீல் கும்பலின் தொல்லை நாளுக்கு நாள் தாங்க முடியவில்லை.. புதிதாக அறிவித்திருக்கும் மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கூட தென் மாநிலங்களுக்கு கிடையாது.. இதுவும் ஒரு விதமான இன அழிப்பான்.. முதலில் உன் இனம் தமிழனா திராவிடமா? இனம் என்பது DNA வை சேர்ந்த விஷயம்.. தமிழனின் DNA மற்றும் தெலுங்கனின் DNA என்று ஏதாவது இருக்கிறதா?

இந்த மருத்துவ கல்லூரி விஷயத்திற்கு வருகிறேன்

மத்திய அரசின் இலக்கு ஒவ்வொரு மூன்று பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும் என்பது.. இதில் விஷயம் என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் மொத்த மருத்துவ கல்லூரிகளில் பாதிக்கு மேல் தென் மாநிலங்களான கர்நாடக, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில்தான் இருக்கிறது..

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 30 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது.. அதாவது கிட்டத்தட்ட ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு கல்லூரி.. அதை தவிர்த்து நூறுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன.. இதில் பல மருத்துவ இடங்களை நிரப்ப முடியாமல் தகுதி இல்லாதவருக்கு மருத்துவ இடங்களை விற்கின்றன..

நிலைமை இப்படி இருக்கையில், மத்திய அரசு BIMARU மாநிலங்களான (பின்தங்கிய மாநிலங்கள்) பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம், மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் குறைந்த பட்சம் மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரிகளாவது கட்ட வேண்டும்.. இங்கே ஒப்பீடுகையில் வட மாநிலங்களில் மருத்துவ வசதியில் அவர்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.. ஆகையால் அங்கே முன்னுரிமை கொடுப்பதில் எந்த அநியாயமும் இல்லை.. மிகவும் பலவீனமான பிள்ளைக்குதான் பெற்றோரின் கூடுதல் அன்பு தேவை என்பார்கள்.. அதுபோலதான் இதுவும்..

அதற்க்காக ஏதோ மொத்தமாக தமிழ்நாட்டையும் தென் மாநிலங்களையும் புறக்கணித்துவிட்டதாக செய்யும் பிரச்சாரம் இனவாதத்தையும் பிரிவினவாதத்தையும் தூண்டவே தவிர, ஏதோ தமிழர்கள் மருத்துவ படிப்பு படிக்காமல் போய் விடுவார்களோ என்கிற அக்கறையினால் இல்லை.. ஏன் சொல்கிறேன் என்றால்

2016 இல் கூட மோடி கோவையில் புதிய ESIC மருத்துவக்கல்லூரியை 580 கோடி ரூபாய் செலவில் துவங்கி வைத்தார்..

சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் மத்திய அரசின் உதவியுடன்தான் புதிய மருத்துவ கல்லூரியை துவங்கியது எடப்பாடி அரசு ..

அதை தவிர்த்து ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் 4 மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 355 இடங்களை 2016 இல் 450 கோடி செலவில் உருவாக்கியது மத்திய அரசு ..

2017 ஆம் ஆண்டு medical council of India , தமிழகத்துக்கு கூடுதலாக 305 இடங்களை மருத்துவ முதுகலை பட்டபடிப்புக்கு உருவாக்கிக்கொள்ள அனுமதியளித்தது..

இப்பொழுது சொல்லுங்க மக்களே.. இதுக்கு பேருதான் இன அழிப்பா? NEET தேர்வு வெச்சா, தமிழ்நாட்லதான் மருத்துவ இடங்கள் ஜாஸ்தி, அதை பறித்துக்கொள்ளத்தான் இவங்க மத்திய அரசு சூழ்ச்சி பண்ணுதுன்னு சொல்றாங்க.. சரி.. அங்கே அவங்களுக்கு தேவையான இடங்களை அவங்களுக்கு உருவாக்கி கொடுக்கறோம், அப்போ உங்களுக்கு தொந்தரவு இருக்காதுன்னு சொன்னா, அது எப்படி அவங்களுக்கு கட்டிக்கொடுக்கலாம்? எங்க இந்த அழிக்க பாக்கரியான்னு கூவுறாங்க.. இவங்க என்ன design என்றே புரியல..

— ஜெயஸ்ரீ ராஜன்

Leave a Reply