இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 9 வயது சிறுமி உள்பட 3 பாகிஸ் தானியர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.


பாகிஸ்தானைச் சேர்ந்த தானிஷ் மேமன் என்பவர், ரத்த அழிவுசோகை நோயால் பாதிக்கப்பட்ட தனது 9 வயது மகள் மரியாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக விசாவேண்டி விண்ணப்பித்திருந்தார்.


இதையடுத்து, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில், 'மரியா தானிஷ் … உங்களுக்கான விசாவை உடனடியாக வழங்கும்படி நான் பாகிஸ் தானிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையே, தனதுதந்தை சிகிச்சை பெறுவதற்காக இந்திய விசாகேட்டு விண்ணப்பித்திருந்த மரியம் ஆசிம் என்பவருக்காக சுஷ்மா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், 'தகுந்த ஆவணங்களுடன் பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தை அணுகவும். உங்களுக்கான விசாக்கள் உடனடியாக வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுதவிர, மருத்துவ விசாவுக்காக விண்ணப் பத்திருந்த ஃபரிஹா உஸ்மான் என்ற மற்றொரு பாகிஸ்தான் பெண்ணுக்கும் விசா வழங்கப் படுவதை சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

 

Leave a Reply