மருந்துகடைகள், ரத்த வங்கிகள் லைசென்ஸ் ஒருமுறை எடுத்தால் போதும் அதனை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இனி புதுப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருந்து கடைகள், ரத்தவங்கிகள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற லைசென்ஸ்களை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது.

விண்ணப்பித்தால் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஐந்தாண்டுகளுக்கென லைசென்ஸ் வழங்குவர். அதன் பிறகு அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் மருந்து மற்றும் அழகுசாதனபொருட்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வழங்குகின்ற லைசென்ஸ் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. லைசென்ஸ் பெறுவதற்கான தொகையை மட்டும் செலுத்தவேண்டும்.

ஆக்சிஜன், அழகு சாதனபொருட்கள் உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் இதன் வாயிலாக பயன் பெறும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த தாமதம் ஏற்படும் போது 6 மாதம் வரை அபராதத்துடன் செலுத்தலாம். அதற்குமேலும் தாமதம் ஏற்பட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். அதேவேளையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். லைசென்ஸ் வழங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஒருமுறை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து உற்பத்தி செய்யப்படும் இடங்களில் சோதனை நடத்தலாம்.

வழங்கப்பட்ட அனுமதிக்கு கூடுதலாக மருந்துகள் தயார்செய்தாலோ, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மருந்து கம்பெனிகள் தொடங்க மத்திய-மாநில அரசு மருந்துகட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்துசோதனை நடத்திய பின்னரே அனுமதி வழங்கப்படும் என்று புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply