திமுக அணிகள் இணைப்பிற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலதலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியவிவரங்கள் : அவரவர் கட்சியில் சில நடவடிக்கைகள் நடந்து வருகிறது. அதற்கும் எங்களுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. மற்றொரு கட்சியின் பலத்தையோ பலவீனத்தையோ பார்த்து நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவில்லை.

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவே கட்சிரீதியிலான நடவடிக்கையாக தேசியத்தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அமித்ஷா வருகை அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தும், பாஜகவின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவே அவர்வருகிறார். இணைப்பு அதிமுகவிற்குள் நடக்கிறது, ஒருகட்சியின் இணைப்பு வேறு கட்சித் தலைவர் வருகைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்.

ஜெயலலிதா மரணம் குறித்து தொடக்கம் முதலே மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. ஏனெனில் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். சிறப்பான முறையில் செயல் பட்டிருக்கிறார் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை போக்க நீதிவிசாரணை நடத்த அரசு முன்வந்திருப்பது சரியான முடிவே.

ஜெயலலிதாவின் சரித்திரத்தில் போயஸ்கார்டன் இல்லம் இல்லாமல் எழுதமுடியாது. 50 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது சரியானமுடிவே. ஆளுங்கட்சி பிரிவால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது. நாங்கள் யாரையும் பகடைக் காய்களாக உருட்ட வில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 

Leave a Reply