இந்தி மொழி தெரியாதவர்கள் அந்த மொழியை பயன்படுத்த தேவையில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்

துளு மற்றும் கொடுவா ஆகியமொழிகளை இந்திய அரசமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் பி.கே.ஹரி பிரசாத் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தார். அதற்கு மத்திய இணை அமைச்சரும், அரசுமொழிகள் துறைகளின் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தி என்பது அரசுமொழி, மற்ற இந்தியமொழிகள் தேசிய மொழிகளாகும். மற்ற மொழிகள் மீது இந்தியை திணிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்திபயன்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டோம். இந்தியை ஊக்குவிக்கவோ, அதன் பயன்பாட்டை அதிகரிக்கவோ மத்திய அரசு சிறப்புமுயற்சிகள் எதையும் செய்யவில்லை.

இந்தி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதுதான். அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலமொழிகளை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. மொழி என்பது மிகவும் உணர்ச்சி பூர்வமான விஷயமாகும். தவறான விளக்கத்தின் மூலம் தவறாக வழிநடத்தி விட்டால் நாட்டில் மிகவும் பெரிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றார் அவர்.

Leave a Reply