மத்திய அரசின் 'ஜன் ஒளஷதி' திட்டத்தின் கீழ் மலிவுவிலை மருந்துக் கடைகளை ரயில்வே வளாகங்களில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.


ஏழைமக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்க செய்வதற்காக, 'பிரதமர் பாரதிய ஜன் ஒளஷதி' திட்டத்தை மத்தியஅரசு செயல் படுத்தி வருகிறது. இந்தமருந்துகள், பிரத்யேக மருந்துக்கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.


இந்தநிலையில், ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில்நிலையங்கள் மற்றும் பிற வளாகங்களில் 'ஜன் ஒளஷதி' மருந்துக் கடைகளை அமைக்க ரயில்வேதுறையும், மத்திய அரசின் மருந்து விற்பனைப்பிரிவும் விரைவில் கையெழுத்திடவிருக்கின்றன.


இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரயில் நிலையங்கள், ரயில்மருந்தகங்கள், ரயில் பட்டறைகள் என ரயில்வே துறைக்குச் சொந்தமான அனைத்து இடங்களில், 'ஜன் ஒளஷதி' சிறப்பு மருந்துக்கடைகள் அமைக்கப்படும்.


ரயில்மேடைகள் மற்றும் ஏனைய பகுதிகளில் இத்தகைய மருந்தகங்களை அமைப்பதுகுறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.ரயில்வே தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமானவிலையில் மருந்துகளை அளிப்பதே இந்தமுடிவுன் நோக்கமாகும் என்றார் அவர்.

Leave a Reply