தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு, ஆலோசனைக்குபின் முறையான அளவிலேயே எடுக்கப் பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ செய்திதொடர்பாளர் அபிஷேக் தயால் கூறியதாவது: லுக்அவுட் நோட்டீசை மாற்றும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட வில்லை. முறையான அளவிலேயே ஆலோசனைக்கு பிறகுதான் எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட வில்லை. ஏகே சர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மல்லையாவை கைதுசெய்யவோ, தடுத்து நிறுத்தவோ, அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தினால் தான் நோட்டீஸ் மாற்றப்பட்டது என்பதை பலமுறை கூறியுள்ளோம்.

நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தப்பிசென்று ஒரு மாதத்திற்கு பின்பே, அவர்களுக்கு எதிரான புகாரை, பஞ்சாப் நேஷனல்வங்கி எங்களுக்கு அளித்தது. இதனால், அவர்கள் தப்பிசெல்வதில் எந்த அதிகாரிக்கும் பங்கு உள்ளது என்ற கேள்வியே எழவில்லை. வங்கிகள் புகார் அளித்த உடனேயே நாங்கள் நடவடிக்கையை எடுக்க துவங்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply