தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றுபேர் கொண்ட பாஜக குழுவினர் பார்வையிட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

 சென்னை, திருவொற்றியூர், கார்கில்நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியா ளர்களிடம் அவர் கூறியது:

 கார்கில் நகரில் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றபடாததால் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். பொதுஇடங்களை ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி யிருப்பது போதுமானதாக இல்லை. பாதிப்புகளை நேரடியாக ஆய்வுசெய்து, இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணம்தொடர்பாக, மத்திய அரசிடம் உதவி கோரினால் கட்டாயமாக செய்து கொடுக்கத்தயாராக உள்ளது.

 தமிழகத்தில் மழையால் பாதிக்கபட்ட இடங்களை ஆய்வுசெய்ய மூன்றுபேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கோபால சின்னையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வெள்ளம்பாதித்த பகுதிகளை வரும் சனிக் கிழமை (நவ. 21) ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் அவர்.

Leave a Reply