கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், சந்தூரில் 3,700 ஏக்கர் நிலத்தை ஜிந்தால் (ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்) நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, பெங்களூருவில் உள்ள மவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கிய போராட்டத்தில் கட்சி எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்ட பந்தலிலேயே படுத்துதூங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். 2-வது நாளாக நேற்றும் எடியூரப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடியூரப்பா பேசுகையில், “ஜிந்தால் குழுமத்துக்கு கனிமவளம் நிறைந்த நிலத்தை மிக குறைந்த விலைக்கு தாரைவார்க்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. ஜிந்தால் குழுமத்துக்கும் காங்கிரஸுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசின் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்பதை அனுமதிக்கமுடியாது” என்றார்.

 

Comments are closed.