மஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சிவன் கோயில் நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக முழக்கமிட்டனர். அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply