"தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்". 

இனிமேல் இப்படிப்பட்ட முடிவுகளை இனிமேல் மாணவர்களோ, மாணவிகளோ எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாணவச் செல்வங்கள் மறுபடியும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர வேண்டும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் தன்னம்பிக்கையுடன் எந்த நிலையையும் எதிர் கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதை அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தகுதி வாய்ந்த மாணவ மாணவிகளுக்கு 0.1 சதவீத மதிப்பெண் வித்தியாசத்தில் கூட பலருக்கு மருத்துவராகும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

 

எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இன்று இந்த மாணவியின் மரணத்தை வைத்து தமிழக அரசியல் வாதிகள் கொடூரமான அரசியலாக்கி கொண்டிருப்பது வேதனை, இப்படி ஒவ்வொரு முறையும் தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பதற்காகத்தானே 3 முறை வாய்ப்பு கிடைக்கிறது, 25 வயது வரை வாய்ப்பிருக்கிறது, தமிழிலே எழுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

 

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்று ஒப்புக்கொண்டு 80,000 மாணவர்கள் அதை ஏற்றுக் கொண்டு நடைமுறையை மேற்கொள்ள ஆரம்பித்தாலும் அதை எப்போதும் கொதிநிலையிலேயே சூடாக வைத்திருப்பது தமிழக அரசியல் களம், இன்றைக்கு நீட் தேர்வில் மருத்துவத்தில் சுமார் 63% வாய்ப்பு பெற்றவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவராகள் என்பதும் அதில் பெரும்பாலானோர் கிராமப்புற, ஏழை நடுத்தர குடும்பத்தினர் என்பது உண்மை.

 

நீட் தேர்வினால் மருத்துவ கல்வி கோடீஸ்வரர் வீட்டு பிள்ளைகளுக்கு மதிப்பெண் இல்ல விட்டாலும் கிடைக்கும் என்ற நிலைமை மாற்றப்பட்டுள்ளது நீட் தேர்வினால், தனியார் மருத்துவ கல்லூரிகள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது என்பது தான் உண்மை தகுதியே இல்லாமல் பலர் டாக்டர் ஆவது நீட் தேர்வில் நடக்காது ஆகவே உண்மை நிலையை மூடிமறைத்து ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையை குறை சொல்வது தவறு எந்த போட்டி தேர்விலும் நூலிழையில் பலபேரின் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன என்பது எதார்த்தம் ஆக இதில் மத்திய அரசை குறைக்கூறுவது தவறு.

 

ஓராண்டுகளுக்கு விலக்கு அளித்ததை தமிழகம் பயன்படுத்தி தயார்படுத்த தவறிவிட்டது அது மட்டுமல்ல உயர்நநீதி மன்றம் நீட் தேர்விற்கு எதிரான வழக்குகளை பல நிலைகளில் தள்ளுபடி செய்திருக்கிறது என்பதையும் சட்ட ரீதியாக உயர் நீதிமன்ற ஆணைப்படியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்பதை உணர வேண்டும். இதை அரசியல் ஆக்கி தமிழிககத்தின் அமைதியை கெடுப்பது மாணவர்களின் நலனுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானது.

 

Dr. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்

Leave a Reply