இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், அமித்ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.

கேரளாவுக்கு 1 நாள் பயணமாக பாஜக தலைவர் அமித்ஷா வந்துள்ளார். நேற்று கட்சி அலுவலகம் ஒன்றை தொடங்கிவைத்த அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அதன் பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் தாஜ்விவாந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். பிரமிளாதேவி, மதசார்பற்ற ஜனதா தள மாவட்ட உதவித்தலைவர் காரகுளம் திவாகரன் நாயர், மலங்கரா சர்ச் தாமஸ் ஜான் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜி. ராமன் நாயர், ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாதவன் நாயர், 

“கடந்த சிலநாட்களாகவே பாஜகவுக்காக பணியாற்றி வருகிறேன்.நேற்று அமித்ஷா முன்னிலையில் கட்சியில் சேர்ந்தேன். இந்தியாவை முன்னேற்றும் மோடியின் செயல் பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதனால் பாஜக.,வுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

 

இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் முன்னாள் தலைவராகவும் மத்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் பதவிவகித்தவர்  மாதவன் நாயர். இவரது அரசுப்பணி சேவைகளை பாராட்டி இவருக்கு 2009 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply