திமுகவும் அதிமுகவும் 1967 இலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.  அதாவது நாமளும் அலுப்பில்லாமல் அவங்களுக்கு மாறிமாறி சான்ஸ் கொடுத்துகிட்டு இருக்கோம்.

இவங்களும் ஒருத்தர்மேல் இன்னொருத்தர் குற்றச்சாட்டுகளை துளியும் வெட்கமில்லாமல் அடுக்கிக்கிட்டே போறாங்க. சேற்றை வாரி இறைக்காத குறைமட்டுமே !

யார் ஆட்சியில் இல்லையோ அவருடைய 5 வருஷ முழுநேரத் தொழிலே மாற்று திராவிடக் கட்சியை, அதன் திட்டங்களை, அவர்களின் ஊழலைப் பேசுவது மட்டுமே !

ஆனால் இவர்கள் அடுத்த ஐந்தாவது வருஷம் பதவிக்கு வந்ததும், அவர்கள் விட்டுச்சென்ற ஊழலைக், கொள்ளையை….. அடி தப்பாமல் நடத்துவது மட்டுமே !

முதலில் ஊழல் செய்தவர் இப்போது எதிர் கட்சியானதும் ஊழல் லாவணிப் பாட்டை இப்போது ஆரம்பிக்கிறார்.

உதாரணமாக கருணாநிதி , மாறன் குடும்பத்தினர் மீது பலப்பல குற்றச்சாட்டுகளை சரமாரியாக அலுப்பில்லாமல் அள்ளி வீசிய ஜெயலலிதா தான் இப்போது ஆண்ட 5 வருடத்தில் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார்? கேடு கெட்டு, ஒரு கீழ் கோர்ட்டில் ஒரு சாதாரண திமுக திருட்டு கவுன்சிலருக்குக் கூட எந்த சேதாரமும் இல்லை.

அதே போல கருணாநிதியின் ஆட்சியில், உடன்பிறவா சகோதரியைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் சரம் சரமாக எத்தனைக் குற்றங்களை அடுக்கினார் அவர்? ஜெயலலிதாவை தவிர ஒருவருக்குமே எந்த தண்டனையையும் பெற்றுத் தரவில்லை.

அதனால் தான்….. ஜெயலலிதா மீது திமுக போட்ட வழக்கு கூட இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட சச்சரவின் வெளிப்பாடோ என்று தோன்றுகிறது !

 

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது : கருணா Vs ஜெயா – திமுக Vs அதிமுக இரண்டுமே மேல்மட்டத்தில் ஒன்று தான். சண்டைகள் எல்லாம் அடிமட்டத் தொண்டர்களுக்குள் மட்டுமே !. ஆகவே இந்த மானம் கெட்ட, கேடு கெட்ட திராவிட சாக்கடைகளை விட்டு ஒழிப்போம் !. புதிதாகத் தாமரையை மலரச் செய்வோம் !.

 

Leave a Reply