பி.பி.சி., பிரான்ச் 24, நியூயார்க் டைம்ஸ் என மேற்கத்திய பத்திரிகைகள்/சேனல்கள் எல்லாம் இந்தியாவின் பிட்டத்தையே முகர்ந்துக் கொண்டிருக்கின்றன. இத்தாலியில் 75000 பேருக்கு சீன வைரஸ், அமெரிக்கா மூனாவது இடத்தில் 70000 பேருக்கு சீன வைரஸ் (விரைவில் முதல் இடத்தை பிடித்து விடும் என்று நினைக்கிறேன்), பிரான்ஸில் 25000 பேருக்கு, பிரிட்டனில் எலிசபத் மகன் சார்லஸ் உட்பட 10000 பேருக்கு என கொரானா தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த உலக அறிவாளிக‌ள் நம்மை நோக்கி விரலை காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மருத்துவமனை குறைவாம், நோயாளிகளுக்கு வெகு குறைவான படுக்கை வசதிகளாம். ஏழ்மை அதிகமாம். என்ன ஆகும் என்றே தெரியாதாம். இதில் இந்தியா அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு மிகப்பெரும் தவறாம். பல ஏழைகள் இறந்து விடுவார்களாம். புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளதாம். இப்படியெல்லாம் கதறுகிறார்கள்.

டேய் வெள்ளைக்கார சூனியகாரர்களா, உங்கள் பிட்டத்தை பாருங்களடா. இந்தியாவை போல் இந்த விஷயங்களில் நிர்வாகம் செய்யக் கூடிய ஜனநாயக நாடு எதுவும் இல்லை. கும்ப மேளாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நாளைக்கு ஆறு கோடி பேர் வருவார்கள். இத்தனையும் அது நடப்பது ஏழ்மை மாநிலம் உத்தர பிரதேசத்தில், ஆனால் உலகிலேயே பெரிய கூட்டத்தை ஒரு நெரிசல் சாவு கூட இல்லாமல் நடத்த கூடியவர்கள் இந்தியர்கள். அதுவும் பல நூறு வருடங்களாக.

போலியோவை எடுத்து கொள்ளுங்கள் கிட்டத்தட்ட 17 கோடி குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதை அழித்தது இந்தியா. இந்தியாவில் மிகப்பெரும் அளவில் உற்பத்தி ஆகும் ‘ஜெனரிக்’ மருந்துகள் போல் வேறு எந்த நாட்டிலும் இல்லை. வேறு எந்த நாட்டிலும் அது சாத்தியமே இல்லை. மருந்துகள் மொத்த உற்பத்தியில் இந்தியாவை அசைக்க வேறு எந்த நாடும் இல்லை.

இந்தியர்கள் பார்ப்பதற்கு ஏதோ கட்டுப்பாடற்ற ஒரு கூட்டமாக தெரியும், ஆனால் ஆயிரமாயிரம் வருடங்களாக இந்த சமூகம் அப்படி ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் இருந்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு வெகு விரைவில் கட்டுப்பாட்டிற்கு மாறிவிடும். சமூகத்தில் இருக்கும் பல கோடி சேவை மனப்பான்மை உள்ளவர்கள், கட்டுப்பாடற்றவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு தீர்வை ஏற்படுத்தி விடுவார்கள். நகரங்களை ஒதுக்கி விட்டு பார்த்தால், சுயநலவாதிகளின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் இந்தியாவில் மிகக் குறைவு. மேலும் சீனாவை போல் இங்கு லட்சக்கணக்கானவர்கள் கொலை செய்து பிணக் குவியல்களை மொத்தமாக கொட்டி எரித்து விட்டு மறைக்க இயலாது. ஆகையால் இந்தியா மிக முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே திட்டமிடுகிறது. உற்பத்தி இழப்பு பெரிய இழப்பை நாட்டுக்கு தந்தாலும், பல லட்சம் பேர் சீன வைரஸால் பாதிக்கப்பட்டால் அதன் விளைவை எண்ணிப் பாருங்கள். மருத்துவ செலவுகள், இழப்பீடுகள் என எத்தனை பெரிய செலவை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆகவே, இந்தியர்கள் குறைந்த கால பிரச்னைகளை எதிர் கொண்டாலும், வெகு விரைவில் இந்த கொரானாவிலிருந்து மீள்வார்கள். மாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகிறான். முப்பது முக்கோடி தேவர்கள் அதை காத்து நிற்கிறார்கள். வேறு என்ன வேண்டும் நமக்கு ?

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Comments are closed.