மாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பதை இருமாநில தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கிறது என பா.ஜ., வெற்றிகுறித்து பிரதமர் மோடி, பேசினார்.


டில்லி பா.ஜ. தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இருமாநிலங்களில் பா.ஜ.,விற்கு கிடைத்த மகத்தானவெற்றி. இந்த மாபெரும் வெற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் எங்களுடன் உற்றதுணையாக இருப்பதை காட்டியிருக்கிறது. எங்களது நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்தின் மீதும் மக்கள் தயாராக இருப்பதைகாட்டுகிறது. ஜி.எஸ்.டி, பணமதிப் பிழப்பு குறித்து எதிர்கட்சிகள் பரப்பிய பொய் எடுபட வில்லை. குஜராத்தில் கிடைத்தவெற்றி, எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. குஜராத்தில் 22 ஆண்டுகளாக தொடர் வெற்றிபெற்று வருகிறோம்.

மக்கள் மாற்றம், வெளிப்படைத் தன்மை, முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர். குஜராத் மக்களை யாரும் பிரித்தாளமுடியாது. எதிர்கட்சியினரின் தவறான சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மக்கள் மாற்ற தாகம் கொண்டுள்ளனர். கடந்த 2014 முதல் இந்தியா மாற்றம்கண்டுள்ளது. மக்கள் அளித்த வெற்றிக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply