உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ்ல் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துகொண்டார்.

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும்நிகழ்ச்சி நடந்தது. மிகபிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ” சமஜிக் அதிகர்தா ஷிவிர்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. 27 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான 56 ஆயிரம் சாதனங்கள் விநியோகம் செய்யபட்டன.

இந்தவிழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு மொபைல்போன் உள்ளிட்ட பலசாதனங்கள் வழங்கப்பட்டன. அதில் இளைஞர் ஒருவர் தான்வாங்கிய மொபைல்போனை பயன்படுத்தி பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டார். மோடியும் புன்னகைத்தவாறே, அந்த இளைஞருக்கு போஸ்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Comments are closed.