ரங்கோலி’ ஓவியமாக தனது உருவத்தைவரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சூரத்நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்தனா (23 வயது). இவர் தீபாவளி பண்டிகையின்போது, பிரதமர் நரேந்திரமோடியின் உருவத்தை, ‘ரங்கோலி’ எனப்படும் கோலமாக வரைந்திருந்தார். அதுதொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், வந்தனாவுக்கு பாராட்டுதெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘வாழ்க்கையில் சவால்கள் தொடர்ந்துவரும். அதுபோன்ற சமயங்களில் அதை எதிர்த்து செயல்படுவதுதான் உண்மையான வெற்றி. தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்’ என, மோடி பாராட்டி உள்ளார்.

Comments are closed.