மாற்றுத் திறனாளிகள், மூன்று லட்சம் பேருக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது,'' என, மத்திய அமைச்சர் தவார்சந்த் ஹெலாட் பேசினார். வேலுார் அடுத்த, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், வித்யாநேத்திரம் திட்டத்தின் கீழ், 1,000 மாணவ, மாணவியருக்கு, ஒருகோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. இதில், மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தவார் சந்த் ஹெலாட் பேசியதாவது:

பிரதமர் மோடி ஆட்சிக்குவந்த பின்தான், காது கேளாத, வாய் பேச முடியாத, கண் தெரியாதவர்கள் என, ஆண்டுக்கு மூன்று லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, தொழில்செய்ய, நான்கு சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply