இங்குபேசிய, முதல்வர் நிதிஷ்குமார், பாட்னா பல்கலைக்கு, மத்திய அரசு அந்தஸ்து அளிக்கவேண்டும் என, கோரிக்கை வைத்தார். பல்கலைகளுக்கு, மத்திய அரசு அந்தஸ்து அளிப்பது என்பது எல்லாம், தற்போது, பழையதாகிவிட்டது.

ஐஐஎம்.,கள் எனப்படும், இந்திய நிர்வாகவியல் மையங்களுக்கு, தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடு என்றசங்கிலியில் இருந்து, அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அவை, சுயமாக செயல்பட்டு,

சிறந்த நிர்வாகதிறன் உடையவர்களை உருவாக்க வேண்டும்.சர்வதேசளவில், சிறந்த, 500 பல்கலை களில், நம் பல்கலைகள் ஒன்றுகூட இல்லை. அந்த நிலையை மாற்றும் வகையில், சர்வதேச தரமுள்ளதாக, நம் பல்கலைகள் உருமாற வேண்டும். இதற்காக, 10 தனியார் பல்கலைகள், 10 அரசு பல்கலைகளுக்கு, ஐந்தாண்டுகளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் திட்டம் துவக்கப்படஉள்ளது.

இந்த, 20 பல்கலைகளை, பிரதமரோ, முதல்வர்களோ, அரசியல் வாதிகளோ தேர்ந்தெடுக்கப் போவதில்லை; கல்வி துறை நிபுணர்களால், மூன்றாம் தரப்பு அமைப்புகளே, தரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளன. இந்த வாய்ப்பை, பாட்னாபல்கலையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
 


நாட்டில் உள்ள, அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும், மிகச்சிறந்த ஐந்து அதிகாரிகளை எடுத்துக் கொண்டால், அவர்களில் ஒருவராவது, பாட்னா பல்கலையில் படித்தவராகஇருப்பார். அந்த அளவுக்கு, சிறந்த அதிகாரிகளை, இந்த பல்கலை வழங்கியுள்ளது. ஒருகாலத்தில், இந்தியா என்றால், பாம்பாட்டிகள், பேய்களை விரட்டுபவர்கள், மாந்திரீகத்தில் ஈடுபடுபவர்கள் என்றே, உலகம் பார்த்துவந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. பாம்பை பிடித்தவர்கள், கம்ப்யூட்டர், 'மவுஸ்' பிடிக்கின்றனர்.நாம், 80 கோடி இளைஞர்களை உடையவர்கள். மக்கள் தொகையில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள். மிகப் பெரிய நிலப்பரப்பு, மிகப்பெரிய இளைஞர் சக்தி உடைய நாம், பல சாதனைகளை புரிய முடியும்

கல்விக்கு தெய்வமான, சரஸ்வதியின் அருள், பீஹாருக்கு நிறைய உள்ளது. அது போல், செல்வத்துக்கான தெய்வமான, லட்சுமி யின் கடாட்சமும், பீஹாருக்கு முழுமையாக கிடைக்கவேண்டும். பீஹாரை வளர்ச்சி அடைந்த மாநிலமாக்க வேண்டும் என்பதில், முதல்வர், நிதிஷ் குமார் உறுதியாக உள்ளார்.

நாட்டின், 75வதுசுதந்திர ஆண்டான, 2022க்குள் வறுமையை ஒழிக்கவேண்டும் என, மத்திய அரசு பாடுபடுகிறது. அதேநேரத்தில் பீஹாரை வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக்க, நிதிஷ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பீஹார் வளர்ந்தால், நாடும் வளர்ச்சி அடையும். இருவரும் இணைந்து, பீஹாரையும், நாட்டை யும் முன்னேற்றுவோம்.

பாட்னா பல்கலை நுாற்றாண்டையொட்டி, நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியது

Tags:

Leave a Reply