மிசோரம் மாநில கவா்னராக கேரள பாஜக தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை நியாமிக்கப் பட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் அவா் கவா்னராக நியமிக்கப்படலாம் என்று கேரள பாஜகவினா் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்தவாய்ப்பு ஸ்ரீதரன் பிள்ளைக்கு சென்றது. உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞரான ஸ்ரீதரன் பிள்ளை ஏற்கனவே எம்பி மற்றும் எம்எல்ஏ தோ்தலில் செங்கனூா் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு கணிசமான வாக்குகள் வாங்கியும் மூன்று முறையும் தோல்விகண்டவா்.

மேலும், வாஜ்பாய் அரசின்போது மத்திய அரசின் வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப் பட்டியிருந்தார். கேரளா என்எஸ்எஸ் (நாயா் சா்வீஸ் சொசைட்டி) யின் முக்கிய தலைவராகவும் உள்ளார். கவா்னராக நியாமிக்கப் பட்டுள்ள ஸ்ரீதரன் பிள்ளைக்கு கேரளா முதல்வா் பினராய் விஜயன், எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதல், முன்னாள் முதல்வா்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, அமைச்சா்கள் மற்றும் பாஜக தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Comments are closed.