: முறையற்ற பண பரிவர்த் தனையை தடுப்பதற்காக மியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும் காப்பீடுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார்எண்னை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், மேலும் சிலதுறைகளில் ஆதார் எண்னை கட்டாயமாக்கும் வழி முறைகளை தொடங்கியுள்ளது. வங்கிகணக்குகள், பான் எண், குடும்பஅட்டை ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காப்பீட்டு பாலிஸிகளுடன் ஆதார் எண்னை இணைக்கவேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை உத்தரவி ட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் இயங்கிவரும் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 33 பொதுகாப்பீட்டு நிறுவனங்களின் வாடிக்கை யாளர்களும் தங்கள் ஆதார் எண்னை இணைக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதே போல் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ள்ளது.

Leave a Reply