தமிழ் மாநில பிஜேபி தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
.
அவருடைய வேட்புமனுவை வாபஸ் வாங்கா விட்டால் கார் மீது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மிரட்டல் வந்துள்ளது. சென்னை விருகம் பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிஜேபி சார்பில் அக்கட்சியின் தமிழகதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடுகிறார். அவர் மிக தீவிரமாக  தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார்.  மக்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கார் மீது லாரி ஏற்றிக் கொன்று விடுவோம் என குறுஞ்செய்தி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுத்த இந்தகொலை மிரட்டல் குறித்து, நான் கவலைப்பட வில்லை. இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் என் பணிகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.மிரட்டலைகண்டு அஞ்ச மாட்டேன். அவற்றையெல்லாம் மீறி தான் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுவருகிறேன். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் தமிழையும் கொலைசெய்து இருக்கிறார்கள்.


தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் எனக்கு சந்தேகம் இல்லை. கொலை மிரட்டலை தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு கேட்கமாட்டேன். கொலைமிரட்டல் விடுத்தவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைவர்கள் மீதான பாதுகாப்பில் தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்.

மிரட்டல்குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று  மேலும் தெரிவித்தார்.

Leave a Reply