லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. மோடி மீண்டும் பிரதமராகிறார்.  கருத்துக் கணிப்பு பொய்யானது நாங்களே ஜெயிப்போம் என மார்தட்டிய காங்., தலைவர் ராகுல் பெரும் பின்னடவை சந்தித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ., 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மற்றகட்சிகள் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

உபி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் வயநாடு தொகுதியில் 8 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வியடைந்தார்..

மாநிலங்களை பொறுத்தவரை உபி., மத்தியபிரதேசம், மே.வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, பீகார், புதுடில்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பா.ஜ., கூட்டணியே பெரு வாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசை பொறுத்தவரை பஞ்சாப், கேரளா, மற்றும் தமிழகத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. உ.பி.,யில் மாநில முக்கிய கட்சியான சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தும், பெரும்தோல்விதான் கிடைத்துள்ளது.  இடதுசாரிகளுக்கு கேரளாவை தவிர பிற மாநிலங்களில் பெரும் வெற்றி வாய்ப்பு இல்லை.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்க்கு மேற்கு வங்கதத்தில் பா.ஜ., இது வரை இல்லாத அளவிற்கு 20 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. மம்தா கட்சி பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்.

கர்நாடகாவில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவன்னா ஹசன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தேவகவுடா உட்பட பின்னிலையில் உள்ளனர். பெங்களூரு சவுத் தொகுதியில் பாஜக அறிமுக வேட்பாளர் தேஜஸ்வி சூரியா சுமார் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் பி.ஒய்.ராகவேந்திரா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இதில் கர்நாடகாவில் உள்ள மொத்தமாக 28 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

முதல்வர்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றியநிலையில், 2-வது முறையாகவும் 26 இடங்களையும் வென்றுள்ளது.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும்  அனைத்து தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன, அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவேடாவைக் காட்டிலும் 5 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.

இங்கு பெரும்பாலான தொகுதிகளில் பாஜக 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

நேரு, இந்திராவிற்கு பிறகு

நேரு, இந்திராவிற்கு பிறகு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வரும் 3வது பிரதமர் மோடி. நாடுமுழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 282 இடங்களைவிட இது அதிகம்.

1951-52 ல் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் நேரு 4 ல் 3 பங்கு ஓட்டுக்களை பெற்று வெற்றிபெற்றார். 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முழுபெரும்பான்மை பெற்று நேரு வெற்றி பெற்றார். நாடுமுழுவதிலும் பல்வேறு மொழி பிரச்னைகள் இருந்த போதிலும் காங்., தனிப்பெரும்பான்மை பெற்றது.

சுதந்திரம் பெற்ற 20 ஆண்டுகளுக்கு பிறகு 1967 ல் நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகள் இந்திரா 520 ல் 283 இடங்கள் பெற்று வெற்றி பெற்றார். பொதுத்தேர்தலில் இந்திரா பெற்ற முதல் வெற்றி இது. 1971 ல் நடந்த தேர்தலிலும் காங்., மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

2014ல் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 282 இடங்களில் பா.ஜ., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் நிலையான ஆட்சி தர முடிந்தது. தற்போது பா.ஜ., மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

 

Tags:


Comments are closed.