பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு 274 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என இந்தியாடுடே டிவி சேனல் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா டுடேவுக்காக சிஎஸ்டிஎஸ் – லோகனிடி மூட் என்ற அமைப்பு நடத்திய கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 323 தொகுதிகளில் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, இப்போது தேர்தல் நடந்தால் 274 இடங்களை பெறவாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.அதே போல், 2014ல் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி 164 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. மற்ற கட்சிகள் 105 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

கடந்த 2014ல் 36 சதவீதமாக இருந்த பாஜ ஓட்டு சதவீதமும், 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டுசதவீதமும் 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேசியஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பீஹார், குஜராத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குசதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply