நாட்டின் பொருளாதாரவளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் குறைந்தது உண்மைதான்; ஆனால், அதிலிருந் மீண்டுவருவதற்கான உறுதியுடன் உள்ளோம்," என, பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார்.

கம்பெனி செகரெட்டரி சங்க பொன் விழாவை ஒட்டி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:பா.ஜ., அரசு அமைந்த பின்,3ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதமாக இருந்தது . நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில், வளர்ச்சிவிகிதம், 5.7 சதவீதமாக குறைந்துள்ளதை ஒப்புக் கொள்கிறோம்; ஆனால் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குவர உறுதி பூண்டுள்ளோம்.

ஒரு காலாண்டில், வளர்ச்சி குறைந்ததால், அவ நம்பிக்கையுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதல்முறையாக, நாம், 5.7சதவீத வளர்ச்சியை காணவில்லை. காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, எட்டுமுறை, 5.7 சதவீதம் மற்றும் அதற்கும்கீழான வளர்ச்சியை பார்த்துள்ளோம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, மிகச்சிறந்த பலனை அளித்துள்ளது. ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,ரொக்கத்தின்பங்கு, முன், 12 சதவீதமாக இருந்தது. தற்போது , 9 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply