ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் வருத்த மளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஐந்து நாள் வேலை நிறுத்த த்துக்குப் பிறகு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டு ள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ராமேஸ்வரம் மீனவர்கள் மீதானதாக்குதல் வருத்த மளிக்கிறது, துறையை தொடர்பு கொண்டுள்ளேன். மீனவர்களின் பாதுகாப்பில் மத்தியஅரசும் பாஐகவும் அக்கறையோடு உள்ளன'' என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply