திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்தவரும், டெல்லி மேல்-சபை உறுப்பினருமான முகுல் ராய், (வயது 63) கடந்த செப்டம்பர் மாதம் அந்தகட்சியில் இருந்து திடீரென விலகினார். அதனை தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமாசெய்தார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய முகுல் ராய் பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியானது.

 

இந்நிலையில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தேசியசெயலாளரும், மேற்கு வங்காள பொறுப்பாளருமான கைலேஷ் விஜய்வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

 

மம்தா பானர்ஜியின் வலது கரம் போல திகழ்ந்த முகுல்ராய், பாஜகவில் இணைந்து இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு  .

Leave a Reply