இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒருபகுதியாக முதன் முறையாக அமெரிக்கா விடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா, முதல் கட்டமாக இன்று 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதிசெய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை விதிக்கப் பட்டிருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அப்போதைய அதிபராக இருந்த ஒபாமாவை சந்தித்தார். இதையடுத்து எண்ணெய் ஏற்று மதிக்கான தடைவிலக்கி கொள்ளப்பட்டது.

1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்ய, 1975ல் தடைவிதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்தியகிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டெனால்டுடிரம்பை சந்தித்து, எரிசக்தி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார்.

அப்போது, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடைவிலக்கிக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவிலிருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து, முதல், கச்சா எண்ணெய் கப்பல்,இன்று, இந்தியா வந்தடைகிறது.இது குறித்து, இந்தியன் ஆயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:


அமெரிக்காவில் இருந்து, 39 லட்சம் பீப்பாய் கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியன் ஆயில் கழகம் ஒப்பந்தம்செய்தது. முதற்கட்டமாக, அந்நாட்டின் டெக்சாஸ் நகரில் இருந்து, 16 லட்சம், கச்சா எண்ணெய் பீப்பாய்களுடன், முதல் எண்ணெய் கப்பல், ஆக., 19ல் புறப்பட்டது.


இந்த கப்பல், ஒடிசா, பாரதீப் துறைமுகத்தை இன்று வந்தடைகிறது. இந்த கச்சா எண்ணெயை பெற்றுக்கொண்டு, சுத்திகரிக்கும் பணியை ஐ.ஓ.சி., மேற்கொள்ளும். மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 29.5 லட்சம் பீப்பாய், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவுக்கு, மொத்தம், 78.50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதிசெய்ய, அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து, இரண்டாவது எண்ணெய் கப்பல், அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளது.
 

Leave a Reply