பாஜக நிறுவப்பட்ட தினம் வரும் சனிக் கிழமை (ஏப். 6) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, பாஜகவின் கடந்த காலம், எதிர் காலம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

14 வயதில் நான் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, முதலில் பாரதிய ஜன சங்கமாகவும், பிறகு பாஜகவாகவும் மாறிய இந்தக்கட்சியுடன் இணைந்து 70 ஆண்டு காலம் அரசியல் பணியாற்றியிருக்கிறேன்.

முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில் தான் சொந்தநலன் என்ற கொள்கையே என்னை வழிநடத்திச் செல்கிறது.இந்தியாவின் பன்முகதன்மைக்கும், பலதரப்பட்ட கருத்துகளுக்கும் அளிக்கப்படும்  மரியாதைதான், நமது ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும்.

பாஜக தொடங்கப்பட்ட காலம்முதல், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகொண்ட எவரையும் எங்களது எதிர்ப்பாளர்களாக மட்டுமே கருதுவோமே தவிர, எதிரியாக கருதமாட்டோம்.

அதேபோல், தேசப்பற்று விவகாரத்தில் கொள்கை ரீதியில் எங்களுடன் மாறுபட்டவர்களை தேசதுரோகிகள் என்று ஒருபோதும் நாங்கள் முத்திரை குத்தியதில்லை.

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் விரும்பிய நிலைப்பாட்டை எடுப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை பாதுகாக்க வேண்டியகடமை பாஜகவுக்கு உள்ளது.

பாஜக- நிறுவன தினத்தையொட்டி தனது வலைதளத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எழுதியது

Leave a Reply