பீகாரில் ஆட்சிசெலுத்திய மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமாசெய்தார். பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாருக்கு மோடி தனது டுவிட்டரில் வரவேற்புதெரிவித்தார். அத்துடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாரை நேரில்சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் பா.ஜ.க. ஆதரவுடன் இன்று மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷில்குமார் பதவியேற்றார். 6-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிதிஷ் குமாருக்கும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சுஷில்குமார் மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பீகாரின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர் நோக்கி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply