தெற்காசியாவிலேயே முதல் உலகத்தரம் வாய்ந்த ரோ-ரோ படகுசேவையை குஜராத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி_ஜி

இதன் மூலம் 350 கிலோ மீட்டர் பயணித்த மக்கள் இனி வெறும் 30 கி.மீட்டரில் சூரத்தை அடையலாம்.

குஜராத்தின் கோகா மற்றும் தாஹெஜ் நகரங்களுக்கிடையே சிறியவளைகுடா போன்ற கடல் பகுதியில் ரோ ரோ படகுசேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இதுவரை பாவ் (Bhav) நகர்முதல் பாரூச் எனும் இடம்வரை  தரைப் பயணமாக சுமார் 350 கிலோ மீட்டர் வரை சுற்றிவளைத்துச் சென்று வந்த மக்கள் இனிமேல், வெறும் 30 கிலோ மீட்டர் நீர்வழிப்பயணத்திலேயே செல்ல வேண்டிய இடங்களை அடையலாம்.

இதன் மூலம் 8 மணி நேரம் வரை இருந்த பயண தூரம், வெறும் அரைமணி நேரமாகக் குறைகிறது.

இரு மருங்கிலும் இருந்து ரோ – ரோ படகுகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, சூரத்தின் வைரத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த படகு சேவை ஒரு வரப்பிர சாதமாகவே அமையும்.

615 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல் ஆன் – ரோல் ஆஃப் படகு சேவையின்மூலம் தங்களின் வாகனங்களையும் பயணிகள் எடுத்துச்செல்ல முடியும்.

Leave a Reply