மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரி ப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழிவகுக்கும் முத்தலாக் முறை குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடமே கூட ஒருமித்தகருத்து இல்லை. முஸ்லிம் நாடுகள் பல இம்முறையைத் தடை செய்துள்ளன.

இந்த முத்தலாக் வழக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஆறு மாதத்திற்குள் இஸ்லாமிய விவாகரத்து முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கெஹர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் முத்தலாக் பற்றிய விவாதங்களும், அதை மாற்றி யமைப்பது தொடர்பான சர்ச்சைகளும் தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. முத்தலாக் குறித்த சரியான புரிதல்கள் நாட்டுமக்களிடையே இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகவே தென்படுகிறது.

எனவே முத்தலாக் பற்றிய சிலஅடிப்படை விஷயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.

முத்தலாக் எந்தநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது?

பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் தடைசெய்யப்பட்டுள்ளது. 'தலாக்' என்ற சொல்லை மூன்றுமுறை வாழ்க்கைத் துணையிடம் சொன்னாலே விவாகம் ரத்து ஆகிவிடும் என்பது இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரிடம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதுவும் 'ஹனாஃபி சித்தாந்தத்தை' நம்புகிறவர்கள் மட்டுமே முத்தலாக் முறையை பின்பற்றுகிறார்கள்.

இஸ்லாம் மதத்தின் நான்குமுக்கிய கருத்தியல்களில் ஹனாஃபி சித்தாந்தத்தை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை இஸ்லாமியர்கள் பின்பறு கின்றனர்.

ஹனாஃபி சித்தாந்தத்தின் படி முத்தலாக் சரியானது. பிற மூன்று சித்தாந் தங்களிலும் "ஒரேமூச்சில் மூன்று முறை தலாக் சொன்னாலும்" அது ஒருமுறை கூறப்பட்டதாகவே கருதப்படும். விவாகத்தை முறித்துக்கொள்ள வேண்டுமானால், சில மாதங்கள் இடைவெளிவிட்டு, வெவ்வேறு சமயங்களில் மீண்டும் இருமுறை தலாக் சொல்லவேண்டும்.

சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி ஒரேநேரத்தில் மூன்று முறை தலாக்சொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது மட்டுமல்ல, குரானுக்கும் எதிரானது.

குரானின் 'சூரஹ் பக்ரா' என்ற அத்தியாயத்தில் முத்தலாக்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரேசமயத்தில், ஒரேமூச்சில் மூன்று முறை தலாக்கூறி விவாகரத்து செய்வது புனிதமறையான குரானுக்கு எதிரானது.

முத்தலாக் என்றால் என்ன?

இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை விவாகரத்துசெய்து திருமண பந்தத்தில் இருந்து வெளியே வரவேண்டுமானால், தலாக் என்றசொல்லை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுமுறை சொல்லவேண்டும். கோபத்தில், சீற்றத்தில் தலாக் என்ற வார்த்தையை பயன் படுத்தினால், கணவன்-மனைவி உறவு ரத்தாகாது.

மூன்று முறை "தலாக், தலாக், தலாக்" என்று சொன்னாலும் அது ஒரேமுறை சொன்னதாக கருதப்படும். ஆனால், இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களில் ஆண் தனது மனைவியிடம் ஒரேசமயத்தில் மூன்று முறை தலாக் சொன்னாலும் அவர்களுடைய விவாகம் ரத்தாகி விட்டதாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

முத்தலாக் வழக்கும் கடந்து வந்தபாதையும்! முத்தலாக் சட்டவிரோதமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு வாய்மொழியாக தலாக்

சிலர் எழுத்து மூலமாக தலாக் சொல்கிறர்கள். எழுத்து பூர்வமாக முத்தலாக் செய்யமுடியாது. வாய்மொழியாக, சொல்வதே தலாக்காக ஏற்றுக் கொள்ளப்படும்.

விவாகரத்து செய்தபிறகு தமது செயலுக்காக வருத்தப்பட்டாலோ அல்லது அவரசப்பட்டு விட்டதாக கருதினாலும் ஒன்றும் செய்யமுடியாது.

ஹலாலா நடைமுறை

தாங்கள் தவறு செய்து விட்டதாக கருதும் கணவன், மீண்டும் மனைவியுடன் சேர்ந்துவாழ விரும்பினால், அது சுலபமானதில்லை. மறுபடியும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது.

Leave a Reply