முத்தலாக் மசோதா நிறைவேற்றப் பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தில், கருத்து பதிவிட்டுள்ள அவர், ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிகால செயல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு நிகழ்ந்த அநீதி முத்தலாக் தடைசட்டம் மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்தமசோதா உதவும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.