முத்ரா திட்டத்தின் மூலம் இது வரை ஒருகோடியே 73 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடை பெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல்வேறு மந்திரிகள் கலந்துகொண்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் முத்ரா நிதி திட்டத்திற்கான கடன் உத்தரவாதநிதிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முத்ரா லிமிடெட் நிறுவனத்தை சிறு குறு தொழில் முனைவோருக்கான வங்கியாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒருலட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, “முதல் கடன் உத்தரவாத நிதிக்காக முத்ராவங்கி தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இன்று 2 கடன் உத்தரவாத நிதிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முத்ரா வங்கிக்கானகடன் உத்தரவாத நிதியும் ஒன்று.” என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, முத்ரா திட்டத்தின்மூலம் இதுவரை ஒருகோடியே 73 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply