முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கப் பட்டு வந்த ஆழ்ந்தகோமா நிலையில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜியின் மறைவுகுறித்து அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி தனது சுட்டுரை பக்கத்தில் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு பிரணாப் முகா்ஜி தொடா்ந்து ஆழ்ந்தமயக்க (கோமா) நிலையிலேயே இருந்து, நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர்பிரிந்தது.

மூளையில் ரத்த கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப்முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவில் இருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப் பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.

இந்தநிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்ய  பட்டிருந்தது.

 

 

Comments are closed.