முன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவ மனையில் உயிர் பிரிந்தது. அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஷீலா தீட்சித். 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்மந்திரியாக பதவி வகித்தார்.

 

இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப் பதாவது: –

டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலாதீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

கட்சி எல்லைகளை தாண்டி அனைவராலும் மதிக்கத்தக்க தலைவர் ஷீலாதீட்சித். டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் மறைவுக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல மத்திய அரசு திட்டங்களை டெல்லியில் அமல்படுத்த அவரது கொள்கையுடன் இணைந்து செயல்பட்டு டெல்லியை அதிநவீன நகரமாக மாற்றியவர் ஷீலா திக்‌ஷித்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் ஆகிய மூன்று தலைமுறை காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக செயல்பட்ட ஒரே காங்கிரஸ் தலைவர் ஷீலா திக்‌ஷித்

Tags:

Comments are closed.