முரசொலி பவளவிழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். முரசொலி பவளவிழா வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

விழாவில், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குவார்கள் என்று அழைப்பிதழில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழிசை சௌந்தர் ராஜன், வைகோ உள்ளிட்டோர் தங்களால் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் . இந்நிலையில் முரசொலி பவளவிழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

Leave a Reply