மோடி இருக்கும் வரை: தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது:–

ஸ்டாலின் சென்னையிலிருந்து குடியுரிமை சட்டதிருத்தம் மசோதாவை பற்றி என்ன பேசப்போகிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். காலை, மதியம், மாலை, இரவு என்று போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஒன்றும் செய்யமுடியாது. பிரதமர் நரேந்திர மோடி இருக்கும்வரை ஒருபோதும் நடக்காது.

இது 1940ம் ஆண்டு உள்ள ஜின்னா காலம் அல்ல. அது முடிந்துவிட்டது. தமிழகத்தில் இப்போது திமுக இல்லை, முஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்பட்டு வருகிறது. 1940, 47ல் இருந்த பாஜக தலைவர்கள் இல்லை. இப்போது இருக்கும் பாஜக தலைவர்கள் வேறு, பார்த்துகொண்டிருக்க மாட்டார்கள். இந்திய வரலாற்றிலேயே உலகத்தலைவர்கள் அகமதாபாத்தில் பலலட்சம் பேர் இருந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது பிரதமர் மோடி எவ்வளவு பெரியதலைவர் என கூறினார். மோடி இருக்கும்வரை தேசத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

1947 ல் இருந்த முஸ்லிம்களும் 2020ல் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. இந்தியாவில் மசூதிகள் அதிகரித்து இருக்கிறதா குறைந்திருக்கிறதா நீங்களே சொல்லுங்கள். ஸ்டாலின் இப்போது ஸ்டாலின் ஆக இல்லை. தமிழர்கள் என்றுசொல்லும் ஸ்டாலின் இலங்கையில் தமிழர்கள்லட்ச கணக்கானவர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யவில்லை. அப்போது மத்தியில் காங்கிரஸ் தமிழகத்தில் திமுக தான் ஆட்சியில் இருந்தார்கள் இவர்களால் என்ன செய்யமுடிந்தது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொல்லதான் முடிந்தது.

பாஜக ஆட்சியில் இலங்கையில் ஒரு தமிழர்கூட கொல்லப்படவில்லை உலகத்தில் எந்த நாட்டிலும் ஒருதமிழர் கூட கொல்லப்படவில்லை. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆகிவிட வேண்டும் என கனவு கண்டு கொண்டு இருக்கிறார். சென்னை மேயராக கூட ஆக முடியாது. காலை எழுந்தவுடன் பொய்பேசி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஜெயிலிலிருந்து வெளியேவந்து உள்ளார். அவர் தான் இப்போது ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக, கிராமம் கிராமமாக, வீடுவீடாக சட்டத்தைப் பற்றி விளக்கிச் சொல்லவும் பாஜக தயங்காது. தேசிய குடியுரிமை திருத்தசட்டத்தை பற்றி பொய்பிரச்சாரம் ஒருபோதும் வெற்றிபெறாது. இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய குடியுரிமை சட்டதிருத்த ஆதரவு விளக்கபேரணி மற்றும் விளக்க கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட பாஜக. சார்பில் நேற்று நடந்தது.அதில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியது

 

One response to “முஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்படுகிறது”