பாஜக செய்தித்தொடர்பாளரும், அசாம் சிறுபான்மையின மேம்பாட்டு வாரிய தலைவருமான மோமினல் அவல் பேசியபோது “ முஸ்லீம்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லலாம். ராம ராஜ்ய த்தை உருவாக்கிய ராமர் ஒருசகாப்தத்தை உருவாக்கியவர்.

ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவதற்கு எந்த தடையும் இல்லை. இஸ்லாமி யத்தை பின்பற்றுபவர்கள் இயேசு கிறிஸ்து, ஹனுமான், சங்கரகுரு ஆகியோரையும் பாராட்டலாம். மிகப் பெரிய மகான்களை புகழ்வது மதக் குற்றங்கள் ஆகாது. அசாமில் உள்ள சிலர் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்திற்கு மதசாயம் பூசி, மாநிலத்தில் ஆளும் பாஜக அரசைகலைக்க முயற்சிக்கின்றன. ஆனால் 2021-ம் ஆண்டு அசாமில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும் ” என்று தெரிவித்தார்.

சமீபகாலமாக அசாம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஜெய் ஸ்ரீ ராம் கூறச்சொல்லி முஸ்லீம்கள் கட்டாயப்படுத்தப் படுவதும் தாக்கப்படுவதும் என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறும் நிலையில், பாஜக தலைவர் இந்தகருத்து கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Comments are closed.