கூட்டத்தில் கலந்துக்கொள்ள செல்பவர் எதற்காக 300 பைகளை கொண்டுசென்றார் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் டி.என்.சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறிய விஜய் மல்லயா பல்லேறு வங்கிகளிடமிருந்து 9 ஆயிரம்கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார்

 

மும்பை சிறப்பு நீதி மன்றத்தில் வாதிட்ட மல்லையாவின் வழக்கறிஞர், அமலாக்க த்துறை சொல்வது பொய் விஜய் மல்லையா ரகசியமாக ஒன்றும் செல்லவில்லை. ஜெனிவாவில் நடக்கும் உலகமோட்டார் விளையாட்டு கூட்டத்திற்காகதான் சென்றார். இது ஏற்கனவே திட்டமிட்ட கூட்டம்தான் என்றார்.

 

இதற்கு பதில் வாதம்செய்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், மல்லையா இந்தியாவர மறுத்து வருகிறார். இது அரசியல் உள்நோக்கம்கொண்டது என்கிறார். சிறையின் அமைப்பு தொடர்பான வீடியோ லண்டன்கோர்ட்டில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டும் அவர் திருப்தி அடையவில்லை என்றார்.

 

இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகளை கடனாக பெற்று வெளிநாடு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடைமுறையில் பெரும்பான்மையை மத்திய அரசு முடிந்துவிட்டது விஜய் மல்லையா இந்திய சிறைகளில் அடைக்கப்படும் நாள்  மிகவும் அருகாமையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply