விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப் படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

மெர்சல் திரைப்படத்தில், ஒருகாட்சியில் கதாநாயகன் பேசும்போது, "சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை" என்று வசனம்பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சட்டங்களை மதிக்காமல் திரைப் படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப்பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள்.

தவறான நடவடிக்கைகளை ஆதரிக் காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம்? இம்மாதிரி கருத்துக்களை பரப்புவது கண்டிக்கத் தக்கது," என்று தமிழிசை கூறினார்.

மேலும், "நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளம் குறித்து மக்களிடம் நேர்மையாக சொல்ல முடியவில்லை. அதற்கு நேர்மையாக வரிகட்ட முடியவில்லை.

இப்படிப்பட்டவர்கள் 24 மணிநேரமும் பணியாற்றும் பிரதமரின் திட்டத்தை குறை கூற முடியாது," என்றும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டு மென்றும் தமிழிசை கூறினார்.

Leave a Reply