மெர்சல் படத்தில் பொய்களின் அடிப்படையில் வெறும் மோடிவெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப் பட்டுள்ளது. உண்மையின் அடிப்படையில் விமர்சனங்கள் இருந்தால் அதை பாஜக வரவேற்கும். ஆனால் மோடி அவர்களுக்கு எதிராக ஒருஅரசியல் சூழ்நிலையை உருவாக்கும் திட்டமிட்ட சதியாக காட்சிகள் அமைந்துள்ளது ஏற்புடை யதல்ல.


முதலில் GST புதியவரி அல்ல. மேலும் அடிப்படை தேவைக்காண பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் 7% GST இருக்கும்போது மருத்துவம் இலவசம் என்று பொய் பேசியுள்ளார்.


அடுத்து சாராயத்திற்கு வரியில்லை என்கிறார். தமிழகத்தில் சாராயத்திற்கு 250% வரை வரி விதிக்கப்படுகிறது.எனவே விஜயின் வசனங்கள் பிரதமர் மோடி அவர்களை குறிவைத்து திட்டமிட்ட ரீதியில் அவதுருபரப்பும் செயலே ஆகும்.


ஸ்டார் டிவியில் தீபாவளி பண்டிகை அவசியமா, ஆடம்பரமா என்று பட்டிமன்றம் நடத்தியதையும் விஜய் கோவில்கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று வசனம் பேசியதையும் தனித்தனியாக பார்க்கமுடியாது.


கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகள் 17500, மசூதிகள் 9700, இந்துகோவில்கள் 370. சர்ச்சுகள் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று ஏன்வசனம் இல்லை.இந்துக்களை தங்களின் இலக்காக்கி தாக்குகின்றவர்கள் பலஉருவில் வருகின்றனர் என்பதையே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எதிர்ப்புத் தீயில் பிறந்த அரசியல் தலைவர் மோடி. நெருப்பில் பூத்த மலர் தாமரை. இந்த பூச்சாண்டி எங்களை மெர்சலாக்காது.

நன்றி H.ராஜா

பாஜக தேசிய செயலாளர்

Leave a Reply