தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று கோவைவந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு தமிழக இளைஞர்களை தொழில் முனை வோர்களாக உருவாக்குவதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் முயற்சிசெய்து வருகிறது. மத்திய மின் பகிர்மான கழகத்தில் இருந்து 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வெள்ளநிவாரண நிதியாக ரூ.1900 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வறட்சிநிவாரண நிதியாக ரூ.1700 கோடி விவசாயிகளுக்கு வழங்கபட்டுள்ளது.

தமிழகத்தில் தேமுதிக.வுடன் கூட்டணி அமைக்க நட்புரீதியாக முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. தே.மு.தி.க.வின் திருப்புமுனை மாநாட்டிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் திமுக. – காங்கிரஸ் கூட்டணி முடிவாகியுள்ளது. இது ஊழல் கூட்டணியாகும். இவர்கள் மக்களால் ஏற்கனவே புறக்கணிக்கப் பட்டவர்கள். மக்கள் நல கூட்டணி பல மில்லாத கூட்டணி. அவர்களால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் பலமானகூட்டணி அமைத்து போட்டியிட்டோம். 2016 சட்ட சபை தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். அதுவே தமிழகத்தின் முதன்மையான கூட்டணியாக இருக்கும்.

Leave a Reply