பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப் பாகும் நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்நிகழ்ச்சியை தொகுத்து உலகம்முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், காட்டுக்குள் வனவிலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டால் மனிதர்கள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்தும் அப்பகுதிகளுக்கு சென்று விளக்கம்அளிப்பார்.

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்தியபிரதமர் மோடி கலந்துக்கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்துள்ளார். இதுகுறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில், ‘180 நாடுகளைசேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது. விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனப் பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ என பதிவிட்டுள்ளார். இதற்கிடையே ஒருநேர்காணலின் போது பிரதமர் மோடி, தான் 5 நாட்கள் காட்டில் தனியாக இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.